search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவனிடம் ஓரினச் சேர்க்கை"

    திருவண்ணாமலையில் சிறுவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆசிரியர் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 36). ஓட்டல் தொழிலாளி.

    திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி செ.ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு 17 வயதுடைய சிறுவன் வேலை வாங்கித் தருமாறு பன்னீர் செல்வத்தை அணுகினான்.

    பன்னீர்செல்வம் தனக்கு தெரிந்த ஓட்டலில் வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த சிறுவனை பைக்கில் அழைத்துச் சென்றார். செங்கம் சாலையில் உள்ள மறைவான இடத்திற்குள் பைக்கை திடீரென ஓட்டிச் சென்றார்.

    மறைவான பகுதிக்குள் எதற்கு செல்கிறோம் என்று கேட்டதற்கு பன்னீர் செல்வம் பதிலளிக்காமல் மிரட்டினார். மேலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    அதிர்ச்சியடைந்த சிறுவன் ஆசைக்கு இணங்க மறுத்தார். பன்னீர்செல்வம் தொடர்ந்து அச்சுறுத்தும் படி பேசியதால் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

    இதுப்பற்றி பெற்றோரிடம் சிறுவன் கூறினான். இதையடுத்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் சிறுவன் தரப்பில் பன்னீர் செல்வம் மீது புகார் அளிக்கப்பட்டது. சிறுவனை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றதாக வழக்குப் பதிவு செய்து பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×